லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ “என்னுடனேகூடப்” “பரதீசிலிருப்பாய்” என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இன்று உலகத்தில், “கடவுளின் விசுவாசம்” என்றால் என்ன என்பதை அநேகர் புரிவதில்லை. உலகத்தில் இருக்கும் விசுவாசம் எங்கள் கிரிகைகளில் தங்கியிருக்கும் அனால் கடவுளின் விசுவாசம் அவர்மேல் தங்கியிருக்கும். அதாவது அந்த விசுவாசம் அவர்மேல், அவர் நமக்காக செய்துமுடித்த [சிலுவை] கிரிகையில் தங்கியிருக்கும்.
உதாரணமாக, இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களை தன்மேல் சுமந்து நம்மை முற்றிலும் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலை செய்து தன்னுடைய நீதிகளாக மாற்றி தன்னோடு ஒன்றாக்கவே வந்தார். இதுவே இரட்சிப்பு. ஆனாலும், இன்று மனுக்குலம் இவைகளை சாதாரணமாக நம்பாமல் [தங்கள் விசுவாசத்தை இயேசுகிறிஸ்துவின் செய்துமுடித்தகிரிகையில் போடாமல்] மாறாக, இரட்சிக்கப்படும் பாரத்தை, கட்டுக்களை தாங்களே சுமக்கிறார்கள், ‘சுமத்துகிறார்கள்’ மற்றும் அதற்காகவே கிரிகைகளை நடப்பிக்கிறார்கள்.
சிலுவையில் இயேசு கிறிஸ்துவை அறைந்த போது அவரோடு கூட, உண்மையாக பாவம் செய்த இருவர்களையும் சிலுவையில் அறைந்தார்கள். அதில் ஒருவன் தன் பாவத்தையும், மரணத்தையும் குறித்து கருத்தில் கொள்ளாமல், எந்தபாவமும் அறியாமல் நமக்காக, நம்மை மீட்க்கும்பொருட்டு தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவை குற்றப்படுத்தினான். ஆனால் மற்றவனோ,
லூக்கா 23:40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே,நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது “அடியேனை நினைத்தருளும்” என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அவன் விசுவாசம் ஒன்றே ஒன்றுதான். இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது “அடியேனை நினைத்தருளும்”. தன்னைக்குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அவன் தன் நிலைமையை பார்க்கவில்லை. தான் பாவியாக இருந்தும் தான் மரணத்திற்கு பாத்திரவானாக இருந்தும், இவர் ஒருவரே என்னை நீதிமானாக விடுதலையாக்கமுடியும் என்பதை மட்டும் அறிந்திருந்தான். மற்றும் அவனுக்கு தெரிந்தது என்னவென்றால், அவர் நமக்காக ஒருதரம் மரிக்கிறார் என்றும் பின்னர் திரும்ப தன் ராஜ்யத்தில் வரும்போது, நம்முடைய பாவங்களுக்காக [நம்முடைய பாவத்திற்கு மரணத்தை/தண்டனையை தர வராமல்] வராமல் “இரட்சிப்பை” அருளும்படி வருவார் என்கிற விசுவாசம் அவனுக்குள் இருந்தது.
இதைத்தான் சுவிஷேசம் சொல்லுகிறது -எபிரேயர் 9 : 28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு “ஒரேதரம்” பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு “இரட்சிப்பை அருளும்படி” இரண்டாந்தரம் “பாவமில்லாமல்” தரிசனமாவார்.
“பாவமில்லாமல்”
பாவமில்லாமல் என்றால் என்ன? அவர் எப்பவும் பாவமில்லாதவர் தான். அவர் மரிக்கமுதலும், அல்லது பின்னரும், அல்லது அவர் என்றைக்கும் பரிசுத்தர்தான். இங்கே பாவமில்லாமல் என்கிற வசனம் அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒருதரம் மரித்து நம்முடைய பாவத்தை ஆக்கினைக்குள்ளாக ஒரேதரத்தில் முற்றும் முடிய தீர்த்துக்கட்டினார்.
அப்பியில்லையென்றால், நாம் ஒவ்வொருதடவையும் பாவம் செய்யும்போது அவர் திரும்பத்திரும்ப மரிக்கவேணுமல்லவா? அப்படியென்றால் அவர் செய்துமுடித்த கிரிகையில் முழுமை இல்லை என்ற அர்த்தம் அல்லவா உண்மையாபோய்விடும்.
இல்லை, இல்லை ஒருபோதும் இல்லை, அவர் செய்கையில் முழுமையிருக்கிறது, அவர் இப்பொழுது பிதாவின் வலதுபாரிசத்தில் உட்க்காருகிறார்[ தன் கிரிகைகளை முடித்து].
அன்றைக்கு சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரேயர் 4 : 2. ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
3. விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த “இளைப்பாறுதலில்” பிரவேசிக்கிறோம்; “அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்” இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்
4. மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே “ஓய்ந்திருந்தார்” என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
5. அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
6. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், “சுவிசேஷத்தை” முதலாவது கேட்டவர்கள் “கீழ்ப்படியாமையினாலே” அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,
7. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.
“சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியுங்கள் இதுவே எங்கள் இரட்சிப்பு”
இன்று மனிதன் செய்யக்கூடிய ஒரே ஒரு நற்கிரிகை என்னவென்றால் கிறிஸ்துவையும் அவர்செய்துமுடித்த கிரிகையையும் விசுவாசிப்பது மட்டுமே, இந்த நற்செய்தியை ஏற்றுக்கொள்வது மட்டுமே அவனை முற்றும்முடிய மீட்டுக்கொள்ளக்கூடிய பரிசுத்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எங்கள் மாம்சகிரிகைகளில் அல்ல மாறாக கிறிஸ்துவின் விசுவாசத்தில் கட்டபட்டது. இது கிருபையின் உடன்படிக்கை. இதை விசுவாசத்தால் மட்டுமே பெற்று தேவனால் பிறந்த விசுவாசத்தால் மட்டுமே நிலைகொண்டிருக்கலாம். நாம் இதற்காக நடப்பிக்கும் கிரிகை என்னவென்றால் சாதாரணமாக விசுவாசம்.
விசுவாசம்
நீங்கள் நம்புகிறீர்களா? கிறிஸ்து மனுக்குலத்தின் பாவத்தை சுமந்து தீர்த்துவிட்டார். பாவத்திற்கும் பிதாவுக்கு இனி சம்பந்தம் இல்லை, எங்கள் பாவத்திற்கு தண்டனை இல்லை, பரலோகம் நமக்குள் இருக்கிறது, ஆக்கினைதீர்ப்பு இல்லை, மரணம் இல்லை, அவருடைய பரிசுத்தமான செயல் இதுவே.
தன்னுடைய பிள்ளைகளை மீட்ட மகிமை அவருக்கே, அவருக்குள் இருக்கிறது. இதில் நமக்கு ஒருபங்கும் இல்லை அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை. ஆனால் அவரால் வந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் சலாக்கியம் எங்களுக்கு மட்டும்தான். ஆனாலும் என்ன, இன்று இவைகளை விசுவாசிகள் அனுபவிக்காமல் சாத்தான் அநேகருடைய கண்களை குருடாக்கி இவைகளுக்காக அவர்களை கஷ்டப்படுத்தி, இந்த உண்மையை மறைத்து, நீங்கள் அவருக்காக செய்தால் மட்டும் தான், செய் செய் என சொல்லி சொல்லி, ஜனங்களை சத்தியத்தில் இருந்து திருப்புகிறான்.
சிலுவையில் தொங்கின இவனுக்குள் இருந்த எளிமையான விசுவாசம்தான் முக்கிய காரணம்.
இவன் கடவுளுக்காக எதுவும் செய்ததில்லை, இவனிடம் எந்த நற்கிரிகையையும் காணவில்லை. வேதாகமும் எழுதவில்லை. மாறாக, இவன் ஒரு கொடூரமான பாவி என தீர்ப்புச்செய்து, மரண தண்டனை கொடுக்கப்பட்ட மனிதன். எத்தனையோ பேருக்கு கிறிஸ்து சரீரசுகம் கொடுத்திருந்தார், எத்தனையோ பேர் இருந்தார்கள், ஆனால் அவர், இந்த பாவியைமட்டும் தன்னோடு இளைப்பாறுதலுக்குள் அழைத்துசென்றாரே? “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்”.
இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த போதும் கூட பாவிகளோடுதான் கூடுதலாக இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது.மத்தேயு 9:10,11 ,13 , லூக்கா 19:7 . அப்பொழுது யூதர்கள் இயேசுவை குற்றப்படுத்தினார்கள். எப்படியென்றால், இவர் பாவிகளோடு சாப்பிடுகிறார், உட்க்காருகிறார், என்றெல்லாம் சொன்னார்கள். அப்பொழுது அவர் சொன்னார் இவர்கள் தான் என் சிநேகிதர்கள் என்றும், மற்றும் பிணையாளுக்கு தான் வைத்தியம் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவனுக்கு தேவையில்லை என சொன்னார். {மத்தேயு 9:12 இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு/பாவிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை}. ஆனால், யூதர்களும் [ உலகத்தில் இருக்கும் அனைவரும்] பாவிகளாகவே இருந்தார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இப்படி பேசினார்கள்.
ஆகவே, இயேசு கிறிஸ்துவந்ததன் நோக்கமே நம்மை தன் செயலினால் முற்றிலும் மீட்பதற்காக. “கிருபையினால் எங்களை மீட்க”. ஏனென்றால், கடவுளின் ஆசீர்வாதத்தை மனிதன் தன் கிரிகைகளினால் பெற முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டோம். ஆகவே நம்மை படைத்தவரே நம்மை மீட்கவேண்டும், அதுவும் கிருபையினால் [இயேசுவினால்] நாம் விசுவாசத்தைக்கொண்டு, இந்த ஒருவழிதான் நமக்கெல்லாருக்கும் உண்டு.
யோவான் 1 : 2. அவர்[இயேசு] ஆதியிலே தேவனோடிருந்தார். இப்படி அவர் கடவுளாக இருந்தும்,
பிலிப்பியர் 2 : 6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
யோவான் 1 : 3. “சகலமும்” அவர் [இயேசு] மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
ஆகவே, அவர்மூலமாக நாம் மன்னிக்கப்பட்டு, மரணத்தில் இருந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கும் சலாக்கியதை கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு பெற்று கிறிஸ்துவுக்குள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறோம் என்கிற உண்மை இன்று அநேகருக்கு தெரிவதில்லை. மாறாக இதற்காகவும், கிறிஸ்துவின் மூலமாக ஆசீர்வாதத்திக்காகவும் “தங்கள்” முயற்சிகளை, அன்பை, ஊழியங்களை செய்கிறார்கள்.
நாம் கிறிஸ்துவின் காரியங்களை செய்யத்தான் வேண்டும், ஆனால் நாம் விரும்புவதால் அல்ல மாறாக பவுலை அழைத்ததுபோல் நம்மை அழைத்தால் அவரே நமக்குள் இருந்த இந்த சத்தியத்தை போதிப்பார் மற்றவர்களின் கண்களையும் திறப்பார். நாம் கஷ்டப்படவேண்டியதில்லை, பவுல் சொன்னார் நான் அல்ல எனக்குள் இருக்கும் அவரின் கிருபையின் ஆவியே என்னை இவ்வளவாய் ஓடப்பண்ணுகிறதென்று. ஆகவே, நாம் என்ன நோக்கத்திற்காக செய்கிறோம் என்பது தான் இங்கே பார்க்கவேண்டும் அதாவது பரலோகத்திற்காகவா, அல்லது இலவசமாய் தந்துவிட்டார், ஆகவே நாம் அதற்காக ஓடமுடியாது மாறாக நான் பெற்றதுபோல் மற்றவனும் பெறவேண்டும் என்ற மாயமற்ற விசுவாசத்தில் இந்த பரிசுத்தகாரியங்களை செய்கிறவன் சத்தியமுள்ளவன்.
ஆனால் கிறிஸ்துவோ எங்கள் கிரிகைகளை பார்த்து இவைகளை கொடுப்பவராக இருந்தால் அவர் கடவுள் அல்ல. கிருபையானது கிருபை அல்லவே.
ரோமர் 11 : 5. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.6. அது “கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது”; “அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே”. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.
ஆகவே, கடவுளின் ஆசீவாதங்களுக்காக நாம் முயற்சிப்பது தவறு மாறாக கிறிஸ்துவின் செய்துமுடித்த செயலில் நம்பிக்கை வைப்பதும் அவரின் செயலில் நாம் திருப்த்தி அடைவதும் அவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரிட்டின இலவசமான இரட்சிப்பை, அன்பை நாம் மதித்து, அவரை நமக்குள் கிரிகைசெய்ய விட்டுக்கொடுத்து – 28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
என்ற வார்த்தைக்கு அர்த்தமுள்ள பிள்ளைகளாக, சத்தியத்தில் நடக்கிறவர்களாக காணப்படுவோமாக.
3 யோவான் 3 -சகோதரர் வந்து நீ “சத்தியத்திலே” நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சத்தியத்தின்படி நடக்கிறபோது நமக்குள் இருக்கும் ஆவியானவர் சந்தோஷப்படுவார் அதுமட்டுமல்லாமல் சாதாரண, எளிமையான கிறிஸ்துமேல் வைக்கும் விசுவாசம் எங்களுக்குள் பெரிய காரியத்தை செய்யும். ஆமென்.
Grace and peace to you!